9 தீவிரவாதம்

உலகில் மதங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான போர்கள் நடைபெற்றுள்ளன. கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமே அதிகமான போர் நடந்துள்ளது. மதங்களை பரப்புவதற்கும்,மதக் கொள்கைகளைப் பரப்புவதற்குமாகவே இப்போர்கள் நடந்துள்ளன. இந்தப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே.

தற்போது தீவிரவாதம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. மதத் தீவிரவாதம் என்று பார்க்கும்பொழுது, எல்லா மதங்களிலும் தீவிரவாத அமைப்புகள் உள்ளன. பல்வேறு நாடுகளில் அரசே தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்பது உண்மையாக உள்ளது. உலகளவில் தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான்.

2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 10,000 தீவிரவாத தாக்குதல்கள் 70 நாடுகளில் நடைபெற்றன. இதில் 44,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 12,500 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் தீவிரவாத தாக்குதல் 12% குறைந்துள்ளது. இருப்பினும் மத தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 7,721 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, இதில் 9,236 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே 85% தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்காவில் 978 தாக்குதல்கள் 2011இல் நடைபெற்றுள்ளன. இங்கு 11.5% உயர்ந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் போகாஹாராம் என்னும் நைஜீரிய தீவிரவாத குழுவால் 136 நடத்தப்பட்டுள்ளது.

அல்காய்தா மற்றும் சன்னி தீவிரவாதிகளால் 5700 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான்கள் 800 தாக்குதல்களை 2011இல் நிகழ்த்தியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே அதிகளவு தாக்குதல்கள் நடக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, நைஜீரியா போன்ற நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன.

இந்தியாவில் நடந்துள்ள மதக் கலவரங்களில் அதிகப்படியாக இஸ்லாமியர்களே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதே சமயத்தில் இந்துக்களும் இதுபோன்ற மத;க கலவரங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீக்கிய கலவரங்கள் 1984ஆம் ஆண்டு ஏற்பட்டபொழுது 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மதக் கலவரங்கள், மதக் குழுக்கள் மோதல் என பல நாடுகளில் நடக்கின்றன. இதுதவிர இந்து மதத்தில் பல்வேறு சாதிய பாகுபாடுகள் இருப்பதால் சாதிக் கலவரங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் தலித் மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர். இதிலும்கூட பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மதங்களின் பார்வையில் பெண்கள் by creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *